கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

Published On:

| By christopher

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில்  இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மொத்தம்  1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

நேற்று மாலை முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை அனுப்பப்பட்டது.

மீதமுள்ள பயனாளிகளுக்கும் இன்று அவர்களது வங்கி கணக்கில் ரூ. 1,000 வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கி சார்பில் அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளி பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிரத்யேகமாக தயாராகியுள்ள ஏடிஎம் அட்டையை 13 பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தோனியின் உலகக்கோப்பை சிக்ஸ்.. ஏலத்திற்கு வரும் வான்கடே இருக்கைகள்!

மின்கட்டண உயர்வு: திருப்பூரில் இருந்து முதல்வருக்கு பறந்த கடிதங்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel