தனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, சேகர்பாபு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதிஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி நினைவிடத்தில் “முயற்சி. முயற்சி.. முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அங்கு அவருக்கு திமுக தொழிற்சங்கத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!