மகளிர் உரிமைத் தொகை: இறுதிக்கட்ட ஆலோசனை!

Published On:

| By christopher

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு இதுவரை ஒரு கோடியே 64 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த அனைத்து விண்ணப்பங்களும் அரசிடம் ஏற்கெனவே உள்ள தரவுகளுடன் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்களை கடந்த 5ஆம் தேதிக்குள் இறுதி செய்ய தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் முடிவில், அரசு அறிவித்த தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை பெற ஒரு கோடி பேருக்கும் அதிகமானோர் வருவதாக அதிகாரிகள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று (செப்டம்பர் 8)  தலைமைச் செயலகத்தில் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முக்கிய ஆலோசனை நடத்தினார். இன்னும் 6 நாட்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.

இதில், உரிமைத் தொகை பயனாளர்களின் இறுதிப்பட்டியல், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

சந்திரபாபு நாயுடு கைது: ‘இந்தியா’ கூட்டணி கண்டனம்-ஆந்திராவில் போராட்டம்!

ஜி 20 மாநாடு… வரவேற்பு மேடையின் பின்னணியில் இருக்கும் சக்கரம் என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel