’பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நாளை நிறைவு : ஸ்டாலின் பங்கேற்பு!

Published On:

| By christopher

rahul gandhi Bharat jodo nyay Yatra

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் “பாரத ஒற்றுமை நீதி யாத்திரை” நாளை (மார்ச் 17) மும்பை தாதரில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ராகுல்காந்தியின் “பாரத ஒற்றுமை நீதி யாத்திரை” கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நீதி யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தியின் இந்த “பாரத ஒற்றுமை நீதி யாத்திரை” நாளை (மார்ச் 17) மும்பை நகரின் தாதரில் உள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சி தலைவர் சரத் பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

”பாரத ஒற்றுமை நீதி யாத்திரை” நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 17) காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்து

மாமியார்-மருமகள் சண்டைக்கு முடிவே இல்லையா?

மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!

Amigo Garage: அமீகோ கேரேஜ் – திரை விமர்சனம்!