தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இன்று காலை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பிறந்தநாள் வாழ்த்து பெறுகிறார். பின்னர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னை சந்திக்க வந்துள்ள தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெற உள்ளார்.
பொதுவாக முதல்வர் பிறந்தநாளன்று அவரை சந்திக்க வரும் தொண்டர்கள், தங்களது ஊரில் கிடைக்கக்கூடிய மதிப்புடைய பொருட்களை கொண்டுவந்து பரிசாக கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று தன்னை சந்தித்து வாழ்த்துக் கூற வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
’பசுமையான தமிழ்நாடு’ மற்றும் ‘மீண்டும் மஞ்சப்பை’ ஆகிய பிரச்சாரங்களை முன்னிறுத்தி இதனை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து!