வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று யோசனைகளை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் முதல்வர் ஸ்டாலின் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் தி வீக் ஆங்கில வார இதழுக்கு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ’எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?’ என்று கேட்கப்பட்டது.
மூன்று ஆலோசனைகள்!
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “சில முக்கியமான ஆலோசனைகளை பாட்னா கூட்டத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன்.
குறிப்பாக,
- எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.
- கூட்டணியாக அமைக்க முடிய வில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம்.
- அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.
தேர்தல் நடத்த யோசிக்கும் பாஜக
மேலும் அவரிடம், ’ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ஆம்! நடைபெறக்கூடிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை மாநிலங்களில் நிச்சயம் பா.ஐ.க. தோற்கும். ஏற்கனவே கர்நாடக மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. அதுபோன்ற தோல்வியை இந்தச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அடைந்தால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தோல்வியை அடைவோமே என்று பா.ஐ.க.வுக்கு பயம் வந்துள்ளது.
எனவேதான் இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தலாமா என்று யோசிப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாள் விழா: 7 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிய முதல்வர்
மீண்டும் 45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
நீங்க கிளம்புங்க..அதான் நல்ல யோசனை.