முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்!

Published On:

| By christopher

மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று (ஜூலை 4) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உடல் சோர்வு மற்றும் தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வயிறு சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனிசாமி தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்தபிறகு முதல்வர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் நேற்று இரவு அறிக்கை வெளியானது.

அதன்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அப்பல்லோ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார்.

முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் வீடு திரும்பினர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஒடிசா ரயில் விபத்து: காரணம் தெரிவித்தது சி.ஆர்.எஸ்

”அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி”- அமைச்சர் தங்கம் தென்னரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel