₹-க்கு பதில் ‘ரூ’ : பட்ஜெட்டுக்கு முன் ஸ்டாலின் செய்த சம்பவம்!

Published On:

| By christopher

mkstalin change the rupees symbol in tn budget 2024-45

ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு (₹) பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி பட்ஜெட் இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ளார். mkstalin change the rupees symbol in tn budget 2024-45

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு உட்பட பல்வேறு கட்சிகளும் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், நிதிநிலை அறிக்கைக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் பட்ஜெட் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு (₹) பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி பட்ஜெட் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முந்தைய தனது இரண்டு பட்ஜெட்களிலும் ரூபாய் அடையாள குறியீடு பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த முறை அது மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலம் தேசிய நாணய சின்னத்தை நிராகரித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், நிதிநிலை இலச்சினையில் தமிழ் எழுத்தான ’ரூ’ பயன்படுத்தப்பட்டுள்ளது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share