வீதிவீதியாக இறுதிகட்ட பிரச்சாரம் : முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம்!

Published On:

| By christopher

ஈரோடு இடைத்தேர்தலுக்கான இறுதிநாள் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) மாலை வரை வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து திமுக கூட்டணி, அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒருமாத காலமாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தொகுதியில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் தென்னரசுவை ஆதரித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இதனையொட்டி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரமாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் இன்று முழுவதும் ஈரோடு கிழக்கில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதன்படி காலை 9 மணிக்கு சம்பத் நகரில் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

காந்தி சிலை அருகே 10 மணிக்கும், அக்ரஹாரத்தில் 11 மணிக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு சக்தி சுகர்ஸ் பகுதியில் முடிக்கிறார்.

உணவு இடைவேளைக்கு பின்னர் மதியம் 3 மணிக்கு முனிசிபல் காலனியிலும், இறுதியாக 3.45 மணிக்கு பெரியார் நகரிலும் வாக்கு சேகரித்து ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

அதேபோல அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக இன்றும் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் : விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா

50,000 பேர் பலி: பேரழிவின் உச்சத்தைத் தொட்ட துருக்கி நிலநடுக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel