mk stalin wishes ki veeramani

ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அரசியல்

திராவிடர் கழக தலைவரும் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான ஆசிரியர் கி.வீரமணி இன்று (டிசம்பர் 2)  தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். stalin wishes ki veeramani

அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திராவிடர் கழக தொண்டர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள ஆசிரியர் கி.வீரமணி இல்லத்திற்கு நேரில் சென்று ‘One Among You’ புத்தகத்தை பரிசளித்து  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ், ஆசிரியர் கி.வீரமணியின் மனைவி மோகனா அம்மையார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.

mk stalin wishes ki veeramani

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் கி.வீரமணி,

“முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது உற்சாகத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலானது திராவிட இந்தியா கூட்டணிக்கும் இந்துத்துவ மதவெறி கூட்டணிக்குமான போராட்டமாக இருக்கும்.

பெரியாரின் கண்ணோட்டத்தில் இது ஒரு கொள்கை போராட்டம். இதற்காக அனைவரும் தயாராக வேண்டும் என்பது தான் என்னுடைய பிறந்தநாள் விழா செய்தியாகும்.

ஆளுநர் ரவி அரசியல் சட்டம் 200-வது பிரிவுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சட்டம் அவருக்கு தெரியவில்லை என்று மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுக்கு திராவிட மாடல் ஆட்சி புதிய தீர்வை உருவாக்கியுள்ளது.

mk stalin wishes ki veeramani

அமலாக்கத்துறை தங்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்று செயல்பட்டு வரும் நிலையில், மதுரையில் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திராவிட ஆட்சி சட்டப்படி நியாயமாக நடக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய மாட்டோம்.

இதனை மக்கள் போராட்டமாக மாற்றுவதை விட சட்டப்போராட்டமாக மாற்றுவோம் என்ற முதல்வருக்கும் அரசுக்கும் கிடைத்த வெற்றி. இதனையே எனது பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்: ஆசிரியர் கி.வீரமணி

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்

stalin wishes ki veeramani

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0