தனது பிறந்தநாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடும் கமல்ஹாசனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மூத்த முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச்சை வீழ்த்திய 19 வயது இளம் வீரர்!
பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டிய திமுக இளைஞரணி புள்ளீங்கோ!