மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) வரவேற்றுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, தெலங்கானா அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பஞ்சாப் அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது. ஆளுநர் மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் என்பதால், அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளால் சட்டம் இயற்றும் வழக்கமான போக்கை கட்டுப்படுத்த முடியாது.
ஜனநாயக பாராளுமன்ற நடைமுறையில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது” என்று தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அடுத்த Speaking4India எபிசோடில் விரிவாக பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கானது நவம்பர் 20-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மூன்று வருடங்களாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பினார். ஆளுநருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவுதம சிகாமணி எம்.பி-யிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!
“த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”: மன்சூர் அலிகான்