குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று (ஏப்ரல் 28) காலை 6 மணிக்கு புறப்பட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி விமானநிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவரை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், எம்.எம்.அப்துல்லா, டி.எம்.கதிர் ஆனந்த், சா.ஞானதிரவியம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அதனையடுத்து குடியரசுத்தலைவர் முர்முவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், வரும் ஜூன் 5ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கருணாநிதியின் ஆங்கில வாழ்க்கை வரலாற்று புத்தகத்தையும் அவருக்கு பரிசளித்தார்.
இந்த சந்திப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டம், மதுரை கலைஞர் நூலகம் போன்றவற்றின் திறப்பு விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக அவை தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கிருந்து நேரடியாக டெல்லி விமான நிலையம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மதியம் 1.30 மணியளவில் சென்னை திரும்ப உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டைலாக வந்த ரஜினி… பாசமுடன் வரவேற்ற பாலய்யா
பொன்னியின் செல்வன் – 2: ட்விட்டர் விமர்சனம் இதோ!