mk stalin voice message

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மக்கள்: வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய முதலமைச்சர்

அரசியல்

தனது பிறந்தநாளில் தொலைபேசி வாயிலாகவும் ஆக்மென்டட் ரியாலிட்டி செல்ஃபி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ஸ் மெசேஜ் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

மார்ச் 1ஆம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள், தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கி முதலமைச்சர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க 07127191333என்ற எண்ணிற்கு போன் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தொலைபேசி மூலமாகவும் செல்ஃபி வாயிலாகவும் முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்லும் நிகழ்வு பிப்ரவரி 28ஆம் தேதி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த ஃபிளாஷ் கும்பல் நிகழ்வில் தொடங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதன்படி, ஃபோன்-எ-விஷ் 21,67,411பேர் தொலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஆக்மெண்டட் ரியாலிட்டி மூலம் 16,75,484பேர் செல்ஃபி எடுத்துள்ளனர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ஸ் மெசேஜ் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியா முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளின் அழைப்புகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களது வாழ்த்துக்கள் என்னை நெகிழசெய்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

மேலும் மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று வாய்ஸ் மெசேஜில் பேசியுள்ளார்.

மோனிஷா

டார்கெட் நத்தம் விசுவநாதன்: நிலக்கரி இறக்குமதியில் விஜிலென்ஸ் ’பொறி’

எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகி: ஓபிஎஸ் காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *