சென்னையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் மே 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார்.
மே 24-ஆம் தேதி சிங்கப்பூர் நாட்டின் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். அப்போது ஆறு நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
நேற்று சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்தித்து முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரில் தனது இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 25) ஜப்பான் சென்றார். கான்சாய் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை ஒசாகாவிற்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் ஜப்பான் ஒசாகா நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
செல்வம்
புதிய பயிற்சி ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ!
“காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை”: சைலேந்திரபாபு