ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை விசிட்… முழு விவரம் இதோ!

Published On:

| By Selvam

முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 6, 7) கள ஆய்வு மேற்கொண்டு, ரூ.9,368 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். mk stalin two days

இன்று காலை 9.20 மணிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், 9.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து 9.45 மணிக்கு 6E 7339 விமானத்தில் தூத்துக்குடி புறப்படுகிறார். 11.25 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மதியம் 12.15 மணியளவில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். பின்னர் மதியம் 12.50 மணிக்கு கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். mk stalin two days

கங்கைகொண்டானில் இருந்து புறப்பட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 1.30 மணிக்கு வரும் ஸ்டாலின், மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.30 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 6.30 மணியளவில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவு 7.45 மணிக்கு வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் ஸ்டாலின், இரவு ஓய்வெடுக்கிறார்.

பிப்ரவரி 7-ஆம் தேதி காலை விருந்தினர் மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் ஸ்டாலின், பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு 9.30-க்கு வந்தடைகிறார். அங்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக, ரூ.1,061 கோடியில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். இதனையடுத்து 75,084 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் பாளையங்கோட்டையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின், 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். 11.45 மணிக்கு 6E 7339 விமானத்தில் புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு 1.45 மணிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தடைகிறார்.

நெல்லை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையம், கேடிசி நகர் பாலம், நாராயணம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.mk stalin two days

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share