தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
என்சிபி கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக நேற்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 8 என்சிபி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் அஜித் பவாருக்கு 40 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் என்சிபி கட்சி இரண்டாக பிளவுற்றுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ” ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் அஜித் பவார் இணைந்ததை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலையை நாங்கள் செய்வோம். என்சிபி உடைந்ததாக நான் ஒருபோதும் கூறமாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் பாஜக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்ற அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி என்சிபி சார்பில் சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
என்சிபி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
செல்வம்
அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்
குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் விளக்கம்!