சரித்திரதிண்ட ஏடுகளில் தங்க லிபிகளில்… வைக்கத்தில் ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Selvam

கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விசிக தலைவர் திருமாவளவன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “இன்னு சரித்திரதிண்ட ஏடுகளில் தங்க லிபிகளில் ஏகப்படுத்திண்டே” என்று மலையாளத்தில் தனது பேச்சை தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “கேரளம், இயற்கை எழில்கொஞ்சக்கூடிய தலம். இது சிறப்புக்குரிய சுற்றுலாத்தலம். கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறியிருக்கக்கூடிய மாநிலம் கேரளம்.

அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் மூலமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகியிருக்கிறது. கேரளாவிற்கு வருகிற எல்லோரும் கட்டாயம் வைக்கம் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவகம் என்பது நம்முடைய வெற்றியின் சின்னம். இனி அடைய இருக்கக்கூடிய வெற்றிகளுக்கு வழிகாட்டக்கூடிய சின்னம்.

1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம் மகாதேவர் தெருவில் அனைத்து சமுதாயத்தினரும் நடந்து போக வழிவகுத்த போராட்டம்.

மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய சமூக கொடுமையை எதிர்த்து நடந்த இந்த போராட்டத்தில் கேரள தலைவர்கள் அனைவரும் கைதானார்கள்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியாருக்கு கடிதம் அனுப்பினார்கள். ஏப்ரல் 13-ஆம் தேதி வைக்கத்திற்கு பெரியார் வந்தார். ஐந்து மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார்.

இரண்டு முறை அவரை கைது செய்து 74 நாட்கள் சிறையில் அடைத்தனர். அந்த சிறைவாசத்தில் அரசியல் கைதிகளுக்கான மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுகுறித்து யங் இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார்.    

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது,  பெரியார் காந்தியடிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு தான் திருவிதாங்கூர் ராணியை சந்தித்திருக்கிறார்.

பின்னர் கோவிலின் மூன்று பக்கம் முதலில் திறந்துவிடப்படுகிறது. இதுதொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க பெரியாருக்கு அழைப்பு விடுத்தபோது, அவர் அதை மறுத்து வாழ்த்தி மட்டுமே பேசினார். இந்த போராட்டம் வெற்றி பெற்றதற்காக அம்பேத்கர், ராஜாஜி, திரு.வி.க உள்ளிட்டோர் பெரியாரை பாராட்டினர்.

வைக்கம் போராட்டம் என்பது கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூக நீதி போராட்டடங்களுக்கான தொடக்க புள்ளி” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

இன்றைய ஸ்பெஷல்: சிக்கன் தோரன்!

இரண்டாவது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel