பாஜகவின் டப்பிங் வாய்ஸ் தான் பழனிசாமி… ஸ்டாலின் தாக்கு!

Published On:

| By Selvam

பாஜகவின் டப்பிங் குரல் தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 15) விமர்சித்துள்ளார். Stalin says Edappadi dubbing

உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பதில்…

டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

நான் ஏற்கனவே சொன்னதுதான், பழனிசாமி அறிக்கைகளைப் பார்த்தால், பாஜக-வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பாஜகவிற்கான டப்பிங் குரல்தான். நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான். இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம்கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம். விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம்.

பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். Stalin says Edappadi dubbing

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share