மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை குழப்புகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் திருமங்கலம் கோபால் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் ராஜ்குமார், சஜி திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் தவறான பிரச்சாரங்கள் செய்கிறார்கள். அண்ணாமலை போன்றவர்கள் மக்களை குழப்பினால் கூட கவலைப்பட மாட்டேன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை குழப்புகிறார்.
திமுக அரசு கோவிலில் கொள்ளை அடிப்பதாக நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
இதுவரை ரூ.5,500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இருந்தால் திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். அவரிடம் பக்தி இல்லை மக்களை ஏமாற்றுவதற்காக பகல் வேஷம் போட்டிருக்கிறார்.
இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுக்கள் இல்லாமலே வெற்றி பெற்று விடுவோம் என்று நான் சொன்னதாக என் பெயரில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருக்கிறார். அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.
இப்படி திட்டமிட்டு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சிலர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”: மன்சூர் அலிகான்
பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
அய்யா, அவிங்களும் அரசியல் பண்ணனும்ல, எதாச்சும் கண்டென்ட் கெடைக்குமானு பாத்தா, இந்த மாதிரி ” இந்துக்களுக்கு ஆபத்து” தவிர வேற எதுவும் அவிங்களுக்குத் தெரியாதய்யா