மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறையால் மனம் உடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறையால் மனம் உடைந்தேன்.
நமது மனசாட்சி எங்கே போனது? வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு மரியாதை கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
’சட்டை கூட கசங்காமல் வெளியே வந்துள்ளேன்’- கனல் கண்ணன்
தியானத்தில் ஆழ்ந்த சமந்தா: வைரல் போட்டோ!