“நாணயமிக்க கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம்” – ஸ்டாலின்

Published On:

| By Selvam

நாணயமிக்க தலைவரான கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது மிக மிக பொருத்தமானது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,

“நாணயமிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடப்படுவது மிக மிக பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இந்தியாவே அவரை கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோல எத்தனையோ சிறப்புக்கு தகுதியுடையவர் தான் கலைஞர்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிக பொருத்தமானதாகும்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விழாவிற்கு வந்திருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்க்கையை ஒரு இயற்பியல் பேராசிரியராக தொடங்கினாலும், அரசியல் மீதான ஈர்ப்பால் சட்டமன்ற உறுப்பினர்,  மாநில அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர் என தனது உழைப்பால் படிப்படியாக உயர்ந்தார். இந்த நிகழ்விற்கு அழைப்பதற்கு ராஜ்நாத் சிங் தான் எனது முதல் விருப்பம். அரசியல் கொள்கை அடிப்படையில் நாங்கள் வேறுபட்டிருந்தாலும்,  நல்ல முறையில் நட்புபாராட்டக்கூடிய ஒரு நபர் ராஜ்நாத் சிங்.

இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் தான். அவர் உருவாக்கிய கட்டமைப்பை பட்டியலியிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒருநாள் போதாது. அதனால் தான் இன்று அகில இந்தியாவும் போற்றக்கூடிய தலைவராக கலைஞர் உயர்ந்திருக்கிறார்.

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில் நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது, கைகொடுத்தவர் கலைஞர். நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதும் நாணயம் தான். சொன்னதையெல்லாம் செய்துகாட்டியது கலைஞரின் நாணயத்திற்கு அடையாளம். அவரது வழியில் இன்றைய திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

எகிறும் கலைஞர் மார்க்கெட்… ஏங்கும் திமுக தொண்டர்கள்! கலைஞர் நினைவு நாணையம்… எங்கே கிடைக்கும்? எல்லாருக்கும் கிடைக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel