அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்து குடியரசு தலைவர் மாளிகை பயன்படுத்தியிருப்பது நாடு முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
செப்டம்பர் 9-ஆம் தேதி ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து டின்னருக்கான அழைப்பிதழ் எம்.பிக்கள் உள்பட பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதழ்களில் The President Of India என்ற பெயர் தான் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் ஜி20 அழைப்பிதழில் The President Of Bharat என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 18-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஐசிசி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!