dmk improve education mk stalin

“தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியது திமுக” – முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியது திமுக என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார். எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள் என்று நான் அடிக்கடி சொல்வது கல்வியும் சுகாதாரமும் தான்.

ஜூன் 15-ஆம் தேதி சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்துள்ளேன்.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து காட்டுவான் ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னை கலைஞர் மருத்துவமனை மற்றும் மதுரை கலைஞர் நூலகம்.

இவை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலைநகர். கலைஞர் நூலகத்தால் லட்சக்கணக்கானோருக்கு அறிவு தீ பரவ போகிறது.

படிப்பகங்களால் வளர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களை கட்டிக்கொண்டிருக்கிறோம்.

நூற்றாண்டு நூலகத்தை அழகாகவும் அற்புதமாகவும் உருவாக்கி கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும் எ.வ.வேலு அவர்களையும் மாணவர்களின் நெஞ்சம் அறிந்த அன்பு தம்பி அன்பில் மகேஷ் அவர்களையும் நான் மனமார பாராட்டுகிறேன்.

ஷிவ் நாடார் அரசு பள்ளியில் படித்தவர். இப்படிப்பட்டவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த தான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார்.

கலைஞர் எழுதிய புத்தகங்களை வைத்து மட்டுமே நூலகம் அமைக்கலாம். கலைஞர் 13 வயதில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி நடத்தினார்.

மற்ற மொழிகளை விட தமிழ் தனித்து இயங்குவதற்கு காரணம் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தான். அதற்கு திராவிட இயக்கமும் திமுகவும் தான் காரணம்.

எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிடக்கூடாது. படிப்பு மட்டும் தான் யாராலும் திருடமுடியாத நிலையான சொத்து. தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்தியது திமுக தான்.

தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்திற்கு முன்னேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

’இங்க நான் தான் கிங்’: ஜெயிலர் படத்தின் இரண்டாம் ப்ரோமோ வெளியானது!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *