“தெற்கின் விடியல் பரவட்டும்”: ஸ்டாலின்

அரசியல்

தெற்கில் ஏற்பட்டுள்ள விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு,

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் டி.கே.சிவகுமார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றும் இரண்டு தலைவர்களும் தங்களது சிறப்பான நிர்வாக திறமையால் கர்நாடகாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.

தெற்கில் ஏற்பட்ட விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். பெங்களூரில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழா அத்தகைய மாற்றத்திற்கான மணியோசையாக விளங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!

விமர்சனம்: பிச்சைக்காரன் 2

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *