உழவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை.
இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம், முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். வேளாண் பெருங்குடி மக்களின் நலன் போற்றும் அரசாக திமுக உள்ளது. ஆனால் உழவர்களுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அவர்களை மாத கணக்கில் தகிக்கும் வெயிலிலும் நடுங்கும் குளிரிலும் மத்திய அரசு டெல்லியில் போராடி வைத்தது. பல நூறு பேர் உயிரிழந்தும் அவர்கள் உறுதி குறையாததால் சட்டத்தை பின் வாங்கினார்கள். உழவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. திமுக அரசு எப்போதும் உழவர்களின் நண்பனாக இருக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு. 1.50 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
Comments are closed.