ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்திருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மாநில அரசின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களை தொடர்புகொண்டு அங்கிருக்கக்கூடிய நிலவரங்களை கேட்டறிந்தோம்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
‘ஃபெஞ்சல்’ புயல்: சென்னையில் காற்றுடன் கனமழை… வேளச்சேரி மேம்பாலத்தில் கார் பார்க்கிங்!
மக்களே அலர்ட்… சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் ‘ஃபெஞ்சல்’ புயல்!