ஸ்டாலின் உடைக்கும் முக்கிய சஸ்பென்ஸ் இதுதானா?

Published On:

| By vanangamudi

‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) ட்விட் செய்துள்ளார்.

முதல்வர் அறிவிக்க இருக்கும் அந்த சஸ்பென்ஸ் என்ன என்பது குறித்து அரசு வட்டாரத்தில் விசாரித்தோம்…

“திராவிட மொழியில் பழமையான மொழி தமிழ் மொழி. அதற்கான மூல மொழி ஆதாரங்களான சொல் அமைப்பு, தொடர் அமைப்பு, எழுத்து அமைப்பு கிடைத்திருக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்” என்கிறார்கள்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel