mk stalin request sharadpawar

சரத்பவார் பதவி விலகல்: ஸ்டாலின் வேண்டுகோள்!

அரசியல் இந்தியா

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. குறிப்பாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

இதற்கு அஜித் பவார் மற்றும் சரத்பவார் இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் கடந்த 2 ஆம் தேதி அறிவித்தார்.

ஆனால் சரத்பவார் பதவி விலகுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “தேசிய அரசியலை மையமாக கொண்ட 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களில் ஒருவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதவி விலகுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

ஆளுநர் மாளிகையில் இருந்து ரவி வெளியேற வேண்டும்: திருமாவளவன்

திமுக-மார்க்சிஸ்ட்:  அனல் பறந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்ததா? 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0