எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 23ஆம் தேதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாகப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுதொடர்பாக இன்று (மே 31) இரவு சென்னை திரும்பியதும் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “அது பழனிசாமியின் புத்தி. தன்னைப் போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான்.
அவரது குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமாகப் பதில் சொல்லி இருக்கிறார். இதற்கு மேற்கொண்டு பதில் சொல்ல நான் விரும்பவில்லை” என்று கூறினார்.
பிரியா
5000 பேருக்கு வேலைவாய்ப்பு : ஏர்போர்ட்டில் முதல்வர் பேட்டி!
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்!