முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயை நினைவு கூர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், கலைஞருடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.
வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘என் மகனே இறந்து போயிட்டான்’- நடிகை திரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு!
ராமதாஸின் வன்னியர் பாசம்… அன்புமணியை தலைவராக்கியது ஏன்? – சிவசங்கர் கேள்வி!