சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்தவகையில், சிந்து சமவெளிப் பண்பாட்டு அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல், 100 ஆண்டுகளுக்கு முன்பு 20-9-1924 அன்று முதன்முதலில் அகழாய்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு திராவிட நாகரிகம் என நிறுவினார்.
அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் தமிழக அரசின் சார்பில் பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் சிந்து சமவெளிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று 2024-25 நிதிநிலை அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 20) வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றியமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். அதற்காக இந்த நேரத்தில் ஜான் மார்ஷலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் கலாச்சாரத்தை சரியாக அறிந்து கொண்டு, அதை திராவிட நாகரித்துடன் தொடர்புபடுத்தி இணைத்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டை ஒட்டி சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும், ஜான் மார்ஷலுக்கு சிலை நிறுவப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ஜீரோ பிரசவ மரணம்’… விருதுநகர் மாவட்டம் சாதனை!
டாப் 10 நியூஸ்: மோடி மகாராஷ்டிரா விசிட் முதல் ‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச் வரை!