மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.84 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலக திறப்பு விழா மற்றும் சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டு குடும்ப நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 4) கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (மார்ச் 3) மாலை 4.15 மணியளவில் செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் புறப்பட்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பவதற்காக ரயில் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர்.
இரவு 8.15 மணிக்கு சீர்காழி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, மேள, தாளங்களுடன் புத்தகங்கள், சால்வை வழங்கி திமுக நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு ஸ்டாலின் சென்றார். இன்று இரவு அங்கு தங்குகிறார்.
தொடர்ந்து நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் 1 மணிக்கு திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.
செல்வம்
திமுக கூட்டணியில் சீறும் சிறுத்தைகள்… அன்புமணி வெயிட்டிங்!
டிஜிட்டல் திண்ணை: மோடி வந்து சென்றபின்… எடப்பாடிக்கு பாஜக எச்சரிக்கை!