“போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள்”: ஸ்டாலின்

அரசியல்

திமுக ஆட்சியில் போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 20) பேசியபோது,

“அதிமுக ஆட்சியில் தான் போதை பொருட்களின் பிடியில் தமிழகத்தை விட்டுச்சென்றனர் . திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போதை பொருட்களுக்கு எதிரான சட்டத்தில் பதிவான வழக்குகள் 40,246 ஆகும். ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை 63,656 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37,847 ஆகும்.

திமுக ஆட்சியில் 65480 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் 1,22,000 கிலோ.

திமுக ஆட்சியில் 3,37,295கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எண்டிபிஏ சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் 5,403ஆகும்.

திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 10,391 வழக்குகள் போடப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறோம்.

இந்த சட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு 15,313 கிலோ கஞ்சாவும் 1.896 கிராம் ஹெராயினும் 527 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மட்டும் 27,140கிலோ கஞ்சா, 22.58கிராம் ஹெராயின் 1,242இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் கள ஆய்விற்கு போகும்போது போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆட்சியாளர்களிடம் கூறி வருகிறேன்.

அதிமுக ஆட்சியில் தான் போதை பொருட்கள் தலைவிரித்து ஆடியது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதனை மறந்து விட்டு அதிமுகவினர் பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.

செல்வம்

பல்வீர் சிங் வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!

கொடநாடு விவகாரம்: டென்ஷனான ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *