முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 96.
தாயார் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று (மார்ச் 16) இரவு பன்னீர் செல்வம் பெரியகுளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
இந்தநிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்று பன்னீரை சந்தித்தனர். அவரது தாயார் மறைவுக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
செல்வம்
மகளிர் காவலர் பொன்விழா: ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!