கோவையில் தங்க நகை தொழிற்பூங்கா… ஸ்டாலின் கொடுத்த நம்பிக்கை!

Published On:

| By Selvam

அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கோவை மாவட்டத்திற்கு இரண்டு நாள் கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) சென்றார்.

காலை 11 மணியளவில் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விளாங்குறிச்சியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இன்று மாலை கோவையைச் சேர்ந்த பல்வேறு தங்கநகைத் தயாரிப்பாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களது பணியிடங்களுக்கே நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர், பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டுவரும் தொழிலாளர் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கோவையில் மக்களின் வரவேற்பு இருந்தது. கோவையில் தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து திமுகவில் மாவட்ட செயலாளர்களை விரிவுபடுத்த இருப்பதாக் தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “அதுதொடர்பாக கட்சி தான் முடிவெடுக்கும். ஊடகங்களிடம் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெருகும் போதைக் கலாச்சாரம்… புதுச்சேரியில் சிதைக்கப்பட்ட சிறுமி…-கயவர்களை கைது செய்தது எப்படி?

அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel