ராமேஸ்வரம் மீனவர் குடியிருப்பிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள மக்களிடம் இன்று (ஆகஸ்ட் 17) கலந்துரையாடினார்.
திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாளை ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் நடைபெற உள்ள மீனவர் மாநாட்டிற்காக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ராமேஸ்வரம் அருகே உள்ள அக்காள் மடம், சேதுபதி நகர் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். தொடர்ந்து மீனவர் ஒருவருடைய வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அந்த வீட்டு பெண்மணி முதல்வர் ஸ்டாலினுக்கு குவளையில் தண்ணீர் கொடுத்தார்.
வீட்டில் இருந்த குழந்தைகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின், ‘நல்லா படிக்கணும்’என்று அறிவுரை கூறினார். பின்னர் வீட்டில் உள்ள அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின் வருகையால் அவரை சூழ்ந்துகொண்ட மீனவர் குடியிருப்பு மக்கள் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
செல்வம்
வந்தியத் தேவன் எம்.ஜி.ஆரு: அப்டேட் குமாரு
“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்