10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 8) ஆலோசனை நடத்தினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்தர் பட் ஆகியோர் மாறுபட்ட கருத்தை வழங்கினர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது, சமூக நீதியை வென்றடுப்பதற்கான நூறாண்டு கால போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அரசியல் ரீதியாக ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து செல்வதிலும், சட்ட ரீதியாக இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
“எங்களது கோரிக்கை ஏற்பு” – முதல்வருக்கு ராமதாஸ் நன்றி!
கையில் காயம் : அரையிறுதிப் போட்டியில் ஆடுவாரா ரோகித்?