முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர்: ஆளுநர் பேட்டி!

Published On:

| By christopher

தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர் என்றும், தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது, திராவிட அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே இப்படி பனிப்போர் நிலவி வரும் நிலையில், ஆங்கில செய்தி தாள் ஒன்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

குறிப்பாக, ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உங்கள் தனிப்பட்ட உறவு எப்படி இருக்கிறது?” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஆளுநர் ரவி, “அது நன்றாக உள்ளது. உண்மையில், முதல்வர் மு.க ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் ஒரு சிறந்த மனிதர்.

அவரிடம் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என்னிடமும் அவர் மரியாதையாக நடந்துகொள்கிறார். தனிப்பட்ட முறையில், எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிடிஆர் ஆடியோ மீது விசாரணையா? – ஆளுநர் பதில்!

“திராவிட மாடல் கொள்கை காலாவதியாகவில்லை”: ஆளுநருக்கு இளங்கோவன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel