எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எங்களோடு இணைந்து மத்திய அரசிடம் இருந்து நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 15) அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற நான்காவது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. கேள்வி நேர பதிலுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 45 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இதுவரை பாஜக கூட்டணியில் இருந்தபோது, பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இப்போதாவது பேசுகிறாரே என்று ஆறுதல் தருகிறது.
இப்பொழுது ஒன்றும் குறைந்துவிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எங்களோடு இணைந்து மத்திய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூடப்படும் பிரபல திரையரங்கம்… நினைவுகளை பகிர்ந்து ரசிகர்கள் வருத்தம்!
தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்!