பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் கடந்த 7-ஆம் தேதி துவங்கியது. இந்தநிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நியாய விலைக்கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத் தொகை 15-ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணிக்கு வராத ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!
ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் வனத்துறை: இரட்டைக் கட்டண வசூலுக்குத் தடை!