கேரள மாநிலம் வைக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.
பெரியார் நினைவகமும், நூலகமும் தமிழ்நாடு அரசால் வைக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்காக பெரியார் நினைவகத்தையும். நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் புதுப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், பெரியார் நினைவக திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 11) கேரள மாநிலத்திற்கு சென்றார்.
அவருக்கு கொச்சியில் கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் தலைமையில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், வைக்கத்தில் பெரியார் நினைவிடம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து இன்று திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து பெரியார் நூலகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
“சினிமாவில் இடைவேளை தேவையா?”: இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!