மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 31) மும்பை செல்ல உள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி கூட்டத்தை கூட்டி அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெங்களூருவில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது தான் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டினர். தற்போது இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளை மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்ல உள்ளார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் செல்ல உள்ளனர்.
மோனிஷா
“தங்கப்பதக்கம் வெல்லாதது சற்று வருத்தம் தான்” – பிரக்ஞானந்தா