டெல்லியில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் ஆங்கிலத்தில் பேச சொல்லி முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று (ஜனவரி 21) நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
நேற்று தொடங்கிய இந்த மாநாடு நாளையுடன் நிறைவடைகிறது. மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள டிஜிபி மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சைபர் கிரைமில் காவல்துறை தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், திறன் மேம்பாடு, சிறைச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி காவல்துறை தலைவர்கள் மாநாட்டை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாநாட்டில் மோடி கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் நாட்டினுடைய பாதுகாப்பு தொடர்பாக கேட்டறிவார்.
அந்தவகையில் இன்று நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் உரையாட உள்ளார்.
கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, இந்தியில் பேசினார்.
அவர் இந்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேச சொல்லி முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் தெரிவித்துள்ளார்.
செல்வம்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணைக் குழு அமைப்பு!
2023 ஐபிஎல்: ரிஷப் பண்ட் பங்கேற்க வேண்டும் – ரிக்கி பாண்டிங்
”இந்திய தேர்வு குழுவே… பேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்!” – கவாஸ்கர் கடுங்கோபம்