தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு பயணம் செய்தார். சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் மே 23-ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு மே 2-ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் வெளியாகும் என்று கோட்டை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி தனியார் நிறுவனங்களில் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திய சட்ட மசோதாவிற்கு கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் கார்ப்பரேட் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது கூட்டணி கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
பிடிஆர் ஆடியோ: ஆளுநரிடம் பாஜக கோரிக்கை என்ன?
விக்ரம் வேதா சீரியலுக்கு சிக்கலா?