திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 7) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுகவில் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி கிளை, ஒன்றியம், நகரம், மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதனையடுத்து கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் பணிகள் தொடங்கியது.
அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திமுக தலைவர் பதவிக்கு சரியாக 12 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, திமுக எம்,பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களும் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக மெரினா கடற்கரையில் இருக்கும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில், வரும் 9ம் தேதி சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
741 மோட்டார் பம்புகள் தயார்: மழைநீரை அகற்ற ஏற்பாடு!