வேலூரில் இன்று கள ஆய்வை துவங்கும் முதல்வர்!

அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை துவங்கி தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்ற ஆய்வில் ஈடுபட உள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் ரயில் மூலம் இன்று மதியம் 12 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் மாலை 5 மணியளவில் விஐடி பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிற பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோல் தொழிலதிபர்கள், விவசாய பிரதிநிதிகள், மகளிர் குழுவினரை சந்திக்கிறார்.

இதனை தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி டாக்டர் கண்ணன் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்கிறார்.

செல்வம்

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை?

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 2

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.