சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலையில் ஒளிபரப்பு செய்வதில்லை என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, “நீதிமன்றமும் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த பின்னரும் சபாநாயகர் எங்களுக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை தர மறுக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு பொதுக்கணக்கு குழு தலைவர் பதவி வழங்கவில்லை.
மக்களுடைய பிரச்சனைகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது நேரலையில் ஒளிபரப்புவதில்லை. அமைச்சர்கள், முதல்வர் பேசும்போது நேரலை செய்கிறார்கள். சட்டப்பேரவை தலைவர் எதிர்க்கட்சிகளை பேசவிடுவதில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
மணீஷ் காஷ்யப் கைது: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்