இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்வதால் முதலீடும் மழையாக பெய்யும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 7) தெரிவித்துள்ளார். mk stalin explain global investors meeting
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, “பொதுவாக நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் கோட் சூட் போடுவது வழக்கம். ஆனால் எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டதால் கோட் சூட் போடுவது பொருத்தமாக உள்ளது.
இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
தொழில்துறையில் மேன்மையும் தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு. இந்தியாவிற்கு பல வகைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம்.
பியூஷ் கோயல் குடும்பம் அரசியல் குடும்பம். அப்பா, அம்மா இருவருமே அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கித்துறை பணியாளராக வாழ்க்கையை துவங்கி நிதி மற்றும் வர்த்தக் துறையில் தனித்திறமை படைத்தவர். அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அனைத்து உயர் அலுவலர்களையும் பாராட்டுகிறேன்.
பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் பயணிக்கும் தமிழகத்திற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும்.
முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்களுக்கு இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும் என்பதில் நான் உறுதியளிக்கிறேன்.
தலைமைத்துவம், நீடித்த நிலைத்த தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பு திறன் உலகத்திற்கு வெளிப்படுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம். தொழில்மயமாக்கல் வளர்ச்சியில் இது ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்க போகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் முதலீடு!
உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது: பியூஷ் கோயல்
mk stalin explain global investors meeting