ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் இன்று (ஜூலை 26) திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆர்.என்.ரவியே ஆளுநராக தொடரட்டும். நமக்காக தேர்தல் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஆளுநர் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தேர்தல் வரை அவரே இருக்கட்டும். நமக்கு வாக்குகள் அதிகரிக்கும்.
வாக்குச்சாவடி முகவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கக் கூடாது.
நமது கட்சிக்கு இருக்கிற கட்டமைப்பும் தொண்டர் பலமும் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகத்திலேயே எந்த கட்சிக்கும் இல்லை.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். யார் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியமல்ல. யார் இருக்கக் கூடாது என்பதுதான் பிரச்சினை” என்றார்.
பிரியா
“அனைவரிடமும் சமூகவலைதள கணக்கு” : ஸ்டாலினின் டிஜிட்டல் பரப்புரை!
வாக்குச்சாவடி முகவர்களுக்கு மூன்று முக்கிய பணிகள் : ஸ்டாலினின் தேர்தல் வியூகம்!
ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானது!